செய்திகள்

'என் சார்பா ஜோதிகாவுக்கு நன்றி சொல்லுங்க' - சூர்யாவுக்கு பதிலளித்த சாய் பல்லவி

கார்கி படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக வெளியிட்டதற்காக சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நடிகை சாய் பல்லவி நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

கார்கி படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக வெளியிட்டதற்காக சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு நடிகை சாய் பல்லவி நன்றி தெரிவித்துள்ளார். 

சாய் பல்லவி முதன்மை  வேடத்தில் நடித்துள்ள கார்கி கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.  படம் பார்த்தவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் என பாராட்டி வருகின்றனர். 

படம் வெளியாவதற்கு முன்பே உதயநிதி ஸ்டாலின், கார்கி படத்தை குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என பதிவிட்டிருந்தார். 

கார்கி படத்தை தமிழகத்தில்  2 டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், எனக்கும் ஜோதிகாவுக்கும் கார்கி படத்துக்கும் நீங்கள் அளித்த மிகப் பெரிய வரவேற்புக்கு நன்றி. இது மிக சிறப்பாக எழுதப்பட்ட, படமாக்கப்பட்ட படம். 

நீண்ட காலத்துக்கு ரசிகர்களால் நினைவில் கொள்ளப்படும். இந்தப் படத்துக்கு பத்திரிகையாளர்கள், ஊடகங்கள், பார்வையாளர்கள் அளித்த அன்பும், மரியாதையும் மனதைத் தொட்டது. சாய் பல்லவி, காளி வெங்கட், இயக்குநர் கௌதம் ராமசந்திரன் ஆகியோருக்கு பாராட்டுகள் என்று தெரிவித்தள்ளார். 

அவருக்கு பதிலளித்த சாய் பல்லவி, எல்லாவற்றுக்கும் நன்றி சார். உங்கள் ஆதரவால் கார்கி படம் அதிக மக்களை சென்றடைந்தது. தயவுசெய்து ஜோதிகாவிற்கும் என் நன்றியை தெரிவியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran

சாலை வலம், பொதுக் கூட்டம்: வழிகாட்டு நெறிமுறைகள் ஜன. 5-க்குள் வெளியிட உத்தரவு!

லியோ சாதனையை முறியடித்த ஜன நாயகன்!

2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!

ஆஷஸ் தொடர்: சாதனைப் பட்டியலில் இணைந்த அலெக்ஸ் கேரி!

SCROLL FOR NEXT