ஆகஸ்ட் 1 முதல் முடங்குகிறது தெலுங்கு சினிமா - அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர்கள்
ஆகஸ்ட் 1 முதல் முதல் தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 1 முதல் முதல் தெலுங்கு சினிமா படப்பிடிப்புகள் அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆர்ஆர்ஆர், புஷ்பா, கேஜிஎஃப் 2 படங்களைத் தவிர பெரும்பாலான தெலுங்கு படங்கள் நட்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரையரங்குகளில் இருந்து கிடைக்கும் வருவாய் வெகுவாக குறைந்துள்ளதாம்.
காரணம் பெரிய நடிகர்களின் படங்கள் உட்பட திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் 3 வாரத்தில் ஓடிடி தளங்களில் வெளியாவதால் மக்கள் திரையரங்குகளுக்கு வர மறுக்கின்றனர்.
Advertisement
Advertisement
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முக்கிய தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்தித்து விவாதித்துள்ளனர். இதனையடுத்து ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகி 10 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும் எனவும் இது நடைமுறைக்கு வரும் வரை திரைப்பட படப்பிடிப்புகள் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நடைபெறாது என்று திட்டவட்டமான முடிவை எடுத்துள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக படங்களின் வசூலை ரூ.100 கோடி, ரூ.200 கோடி என கணக்கு காட்ட திரையரங்க டிக்கெட் ஒன்றின் விலையை ரூ.1000, ரூ.2000 என விற்கின்றனர். இதன் காரணமாக மக்கள் திரையரங்குகளுக்கு வர மறுக்கின்றனர் என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
வெகு விரைவில் தமிழ்நாட்டிலும் இந்த நிலை வரலாம் என கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.