திரைப்படத் தேசிய விருதுகளுக்கான அறிவிப்பு நேற்று வெளியானது. சூரரைப் போற்று படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருது அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டது.
சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் 2020-ம் வருடம் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம்.
படம் வெளியானபோதே பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா பாலமுரளியும் ஏராளமான பாராட்டுகளைப் பெற்றார். இதனால் பொம்மி கதாபாத்திரம் உருவான விதம் குறித்த விடியோ ஒன்றை படக்குழு அப்போதே வெளியிட்டது. இப்போது இந்தக் கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணாவுக்குத் தேடிய விருது கிடைத்துள்ளது. பொம்மி கதாபாத்திரம் உருவானது குறித்து படக்குழுவினரின் பேட்டி:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.