முகப்பு
செய்திகள்

நாக சைதன்யாவுடன் என்ன பிரச்னை? மனம் திறந்த நடிகை சமந்தா

திருமண வாழ்க்கை முறிவு குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ள கருத்துகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
திருமண முறிவு ஏன்? முதன்முறையாக மனம் திறந்த நடிகை சமந்தா
பகிர்:

திருமண வாழ்க்கை முறிவு குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ள கருத்துகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலம் வாய்ந்த நடிகையாக வலம்வருபவர் சமந்தா. சமீபத்தில் அவர் நடித்த தி பேமிலி மேன் 2, புஷ்பா பட ஓ அண்டாவா பாடல் ஆகியவை இந்திய அளவில் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கிக் கொடுத்தன. 

இந்நிலையில் இயக்குநர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகை சமந்தா தனது திருமண வாழ்க்கை குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் கொண்ட காணொலி சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சிகள் வைரலான நிலையில் அதன் முழு காட்சிகள் சமீபத்தில் வெளியாகின. 

அதில் நடிகர் நாக சைதன்யாவை சமந்தாவின் கணவர் என கரண் குறிப்பிட்ட பேச நடிகை சமந்தா இடைமறித்து முன்னாள் கணவர் என திருத்தி பேசினார். தொடர்ந்து நடந்த உரையாடலில் தி பேமலி மேன் 2 படத்தில் இருவரும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா என கரண் எழுப்பிய கேள்விக்கு அப்படி நடந்தால் கூர்மையான பொருள்களை நீங்கள் மறைத்து வைக்க நேரிடும் என கிண்டலாக பதிலளித்த சமந்தா எதிர்காலத்தில் அவ்வாறு நடிப்பதற்கான வாய்ப்பு அமையலாம்” எனத் தெரிவித்தார். 

நடிகை சமந்தா பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பெரும்பாலும் அவரது திருமண வாழ்க்கை முறிவு குறித்து கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அவற்றுக்கு சமந்தாவும் வெளிப்படையாகவே பதிலளித்தார். 

கரண் எழுப்பிய தொடர் கேள்விக்கு பதிலளித்து பேசிய சமந்தா, “இதுகுறித்து நான் புகார் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனெனில் அந்த பாதையை நான் தான் தேர்ந்தெடுத்தேன். எனது வாழ்க்கை குறித்து வெளிப்படையாக எடுத்த முடிவு அது. நாங்கள் பிரியும்போது நான் நொருங்கிப் போய்விடவில்லை. அப்போது அது கடினமாகத் தான் இருந்தது. இப்போது அதிலிருந்து வெளியில் வந்து விட்ட பிறகு நன்றாகவே இருக்கிறது. எப்போதும் இல்லாத அளவு நான் வலிமையானவளாக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

திருமண வாழ்க்கை குறித்து பல்வேறு வதந்திகள் உலவி வந்த நிலையில் நடிகை சமந்தாவின் பதில்கள் தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இருப்பதாக சினிமாத்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →