முகப்பு
செய்திகள்

'இந்தியன் 2' குறித்து வெளியான புதிய தகவல்

இந்தியன் 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

இந்தியன் 2 திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நிற்கிறது. படப்பிடிப்பு மீண்டும் துவங்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

காரணம் படத்தில் நடித்துவந்த உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். கமல்ஹாசன் - விவேக் இணைந்து நடிக்கும் முதல் படமாக இந்தியன் 2 திரைப்படம் கூறப்பட்டது. காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்துவிட்டது. இனி அவர் நடிப்பாரா என்பது சந்தேகமே. 

இந்த நிலையில் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி காரணமாக இந்தியன் 2 திரைப்படத்தை மீண்டும் துவங்க முயற்சிகள் நடந்துவருகின்றன. உதயநிதி ஸ்டாலின் கூட விக்ரம் பட வெற்றி விழாவில் விரைவில் இந்தியன் 2 பணிகள் துவங்கும் என தெரிவித்திருந்தார். 

இதன் ஒரு பகுதியாக இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மேக்கப் பணிகளுக்காக நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா செல்லவிருக்கிறாராம். 

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதன்முறையாக ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு இந்தியன் 2 படத்தை ஷங்கர் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →