செய்திகள்

வில்லனாகவும் நடிக்கத் தயார்: அருண் விஜய்

நல்ல கதாபாத்திரம் இருந்தால் வில்லனாகவும் நடிக்கத் தயாராகவிருப்பதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

DIN

நல்ல கதாபாத்திரம் இருந்தால் வில்லனாகவும் நடிக்கத் தயாராகவிருப்பதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார்.

சேலம் பிரபாத் அருகே உள்ள கே.எஸ்.திரையரங்கில் ரசிகர்களுடன் யானை திரைப்படத்தின் டிரைலரை படத்தின் நாயகன் அருண் விஜய், இயக்குநர் ஹரி ஆகியோர் பார்த்து மகிழ்ந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அருண் விஜய், வரும் 17 ஆம் தேதி வெளியாகும் யானை திரைப்படம் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும். 

நல்ல கதாபாத்திரம் இருந்தால் வில்லனாகவும் ஹீரோவாகவும், ஏற்று நடிக்கத் தயாராக உள்ளேன். யானை படத்திற்கு வரும் அடுத்தடுத்த படங்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்க இருக்கிறேன். திரைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறுவது அவர்கள் எடுத்துகொள்ளும் விதம்தான்.

திரைப்படத்தில் வரும் நல்ல கருத்துக்களை தான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அது நடக்கும் எதிரான விஷயங்களை வைத்து தங்களை மாற்றிக் கொள்வது நல்லதல்ல. கரோனா தொற்றுக்கு பிறகு திரைத்துறை பழைய நிலைமைக்கு வந்துள்ளது. புதிய புதிய படங்கள் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசும் திரைதுறையினருக்கும் மேலும் உதவிகளை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

6 ஆண்டுகளுக்கு முந்தைய கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

SCROLL FOR NEXT