செய்திகள்

'இது எனக்கு வந்த படம்': உண்மையை உடைத்த உதயநிதி; ஷாக் ஆன சிவகார்த்திகேயன்!

DIN


டான் திரைப்படம் முதலில் தனக்கு வந்த கதை என படத்தின் வெற்றி விழாவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்த டான் திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் அள்ளி வருகிறது.

இதன் வெற்றி விழா இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

"இது டாக்டர் திரைப்படத்தின் வசூலை முந்தும் என பாடல் வெளியீட்டு விழாவில் கூறியிருந்தேன். அது தற்போது நடந்திருக்கிறது. அந்த சாதனையை 3 வாரங்களிலேயே டான் முறியடித்திருக்கிறது.

இது வெற்றி விழா என்பதனால், நிறைய உண்மைகளைக் கூறலாம் என நினைக்கிறேன். இந்தப் படத்தை முதலில் நாங்கள் ஒரு நான்கு பேர் (ரெட் ஜெயன்ட்) பார்த்தோம்.

முதல் பாதியைப் பார்த்து இது நகைச்சுவையாக இருக்கிறதா, சிரிப்பு வருகிறதா எனக் கேட்டு நாங்கள் ஒருமாதிரி ஆகிவிட்டோம். பிறகு, இரண்டாம் பாதி படத்தைப் பார்த்தோம்.

கடைசி ஒருமணி நேரம் அப்பா, மகன் உறவு மிகவும் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தப் படம் ஓடும் என்று சொன்னேன். சொன்னதைப்போல தமிழ் சினிமா ரசிகர்கள் இந்தப் படத்தைத் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கிறார்கள். அதற்கு நன்றி.

இன்னொரு உண்மை சொல்கிறேன். இந்தக் கதையை வேறு ஒரு ஹீரோ கேட்டு நிராகரித்திருக்கிறார். அந்த ஹீரோ நான்தான்.

ஆனால், இது எனக்கு மறந்துவிட்டது. இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. பள்ளிக்கூட காட்சிகள் என்னால் செய்ய முடியாது. அதனால், இதை நான் செய்யவில்லை. பிறகு அப்பா, மகன் உணர்வுகள் நிச்சயம் எனக்கு வந்திருக்காது" என்றார் உதயநிதி ஸ்டாலின்.

இதன்பிறகு, சிவகார்த்திகேயன் பேசுகையில், " உதய் சார். உங்களுக்குக் கதை சொன்னதை அவர் (இயக்குநர்) என்னிடம் சொல்லவில்லை. மற்றவர்களிடம் கதை சொன்னதையெல்லாம் சொல்லியிருக்கிறார். ஆனால், இதை மட்டும் சொல்லவில்லை" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT