விரைவில் ‘ஜோக்கர் 2’ படப்பிடிப்பு தொடக்கம்
ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்
ஹாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஜோக்கர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்த திரைப்படம் ‘ஜோக்கர்’.
ஆர்தர் (ஜாக்குவன் பீனிக்ஸ்) மேடை காமெடியனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் கலைஞன். ஆனால், ஒருகட்டத்தில் குடும்பமும் சமூகமும் அவனை எப்படி மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அபாரமான திரைக்கதையால் சொன்ன படமே ‘ஜோக்கர். படத்தில் பீனிக்ஸுன் சிரிப்பும் மிகப்பிரபலம்.
Advertisement
Advertisement
மேலும், இப்படத்தில் நாயகனாக நடித்து மிகச் சிறந்த நடிப்பை வழங்கிய ஜாக்குவன் பீனிக்ஸுக்கு ஆஸ்கர், கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகள் கிடைத்தன.
இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்தை ‘ஜோக்கர்: ஃபோலி எ டியூக்ஸ்' என்கிற தலைப்பில் இயக்க உள்ளதாக இயக்குநர் டூட் ஃபிலிப்ஸ் தெரித்துள்ளார். இதனால், ஜோக்கர் படத்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.