செய்திகள்

முக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பாப் பாடகர் ஜஸ்டின் பைபர்: என்ன ஆச்சு ?

 பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் தனக்கு முக பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

DIN

பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் தனக்கு முக பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

கனடாவைச் சேர்ந்த பாப் பாடகரான ஜஸ்டின் பைபர் தனது பாடல்கள் மூலம் உலக அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ளார். மிகக் குறைந்த வயதிலேயே கிராமி உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். இந்தியரசிகர்களுக்காக அவ்வப்போது இந்தியாவிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்திவந்தார். 

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட விடியோவில் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அதில், தனக்கு ராம்சேய் ஹண்ட் சின்ட்ரோம் என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் முகத்தில் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த நோய் மிக அரிதான ஒன்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது,  என் ஒரு பக்க கண்ணை இமைக்க முடியவில்லை. முகத்தின் ஒரு பக்கத்தில் சிரிக்க முடியவில்லை. இதனை இந்த விடியோவில் உங்களால் பார்க்க முடியும்.

இதன் காரணமாக இசைப் பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளேன். எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் என்று தனது ரசிகர்களிடம் வேண்டுகோள்விடுத்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒடிஸாவில் இருந்து உதகைக்கு கஞ்சா கடத்தி வந்த இளைஞா் கைது

வீடு வீடாக வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

காங்கேயம் கல்வி நிறுவனத்தில் ரூ.1.33 கோடி மதிப்பில் கல்வி ஊக்கத் தொகை

காங்கயம், உடுமலையில் இன்று மின்பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 103 அடியை நெருக்குகிறது

SCROLL FOR NEXT