முகப்பு
செய்திகள்

துணை நடிகைக்கு பாலியல் தொல்லை - ஒளிப்பதிவாளர் கைது

திரைப்படங்களில் கதாநாயகி வாய்ப்பு வாங்கித் தருவதாக துணை நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்த ஒளிப்பதாளர்  காசிநாதன் கைது செய்யப்பட்டார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:31 AM
பகிர்:

திரைப்படங்களில் கதாநாயகி வாய்ப்பு வாங்கித் தருவதாக துணை நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்த ஒளிப்பதாளர்  காசிநாதன் கைது செய்யப்பட்டார். 

சென்னையை சேர்ந்த தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து வரும் இளம்பெண்ணுடன் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்யும் காசிநாதனுக்கு (வயது 42) பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

திரைப்படங்களில் கதாநாயகி வாய்ப்பு வாங்கித் தருவதாக அந்த நடிகையிடம் காசிநாதன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். மேலும் புகைப்படம் எடுக்க வேண்டும் என தன் வீட்டிற்கு துணை நடிகையை காசிநாதன் அழைத்துள்ளார். 

காசிநாதனை நம்பி அவரது வீட்டிற்கு துணை நடிகை சென்றுள்ளார். அப்போது மது போதையிலிருந்த காசிநாதன், துணை நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரிடம் தப்பித்த துணை நடிகை காசிநாதன் குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். இதனையடுத்து காசிநாதனை  கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →