செய்திகள்

வெங்கட் பிரபு படத்துக்கான இசை பணிகளை துவங்கிய இளையராஜா - கங்கை அமரன் தகவல்

இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யாவுடன் இணையும் படத்துக்கு இளையராஜா இசையைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக நாக சைதன்யாவுடன் இணையும் படத்துக்கு இளையராஜா இசையைக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாநாடு, மன்மத லீலை படங்களுக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு வெங்கட் பிரபு அடுத்ததாக தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. 

தமிழ் தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இதனை வெங்கட் பிரபுவின் தந்தையும், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முக திறன் கொண்டவருமான கங்கை அமரன் ஒரு விழாவில் தெரிவித்தார். 

இதுகுறித்து சமீபத்தில் கங்கை அமரன் தெரிவித்ததாவது, வெங்கட் பிரபுவின் தெலுங்கு படத்துக்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். இந்தப் சமீபத்தில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன என்று குறிப்பிட்டிருந்தார். இந்த தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுவரை வெங்கட் பிரபுவின் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி இசையமைத்துள்ளனர். இந்த நிலையில் முதன்முறையாக இளையராஜா அவரது படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார். இருவரும் உறவினர்கள் என்பதால் இப்பொழுதே இந்தப் படத்தின் பாடல்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான சைக்கோ படத்திலும் இளையராஜாவின் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் அவரது பின்னணி இசை விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வந்தவாசியில் ரக்சா பந்தன் விழா

மிதமாக அதிகரித்த தேயிலை ஏற்றுமதி

திருச்சி மாநகரில் பலத்த மழை

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

SCROLL FOR NEXT