'அவன் இல்லை...' எஸ்.பி.பி நிகழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுத இளையராஜா
எஸ்பிபி 75 நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
விஜய் டிவி வெளியிட்டுள்ள எஸ்பிபி 75 நிகழ்ச்சியின் ப்ரமோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 3 ஆம் தேதி எஸ்பிபி 75 என்ற நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், பிரசாந்த், வைரமுத்து ஆகிய பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சி வருகிற ஜூன் 19 ஆம் தேதி ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அதற்கான முன்னோட்டத்தை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் பிரபல நடிகையின் சகோதரர் கைது
அதில் இளையராஜா மேடையில் இளைமை எனும் பூங்காற்று என்ற பாடலை கண் கலங்கியபடி பாடினார். பின்னர் மேடையை விட்டு இறங்கியதும் அவர் கண்களில் கண்ணீர் வடிந்தது.
இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் மேடையேறிய ரஹ்மான் ஒருவன் ஒருவன் முதலாளி பாடலைப் பாடினார். இந்த நிகழ்ச்சியை வெங்கட் பிரபு தொகுத்து வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.