செய்திகள்

நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே: டி. ராஜேந்தருக்கு கமல் வாழ்த்து

நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே என்று வாழ்த்தி, டி. ராஜேந்தருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

DIN

பிரபல நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர், உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

டி.ஆரின் மகனும் நடிகருமான சிம்பு தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:

தந்தைக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்குப் பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அவர் உடல் நலன் கருதியும் உயர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன், நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி என்றார். 

மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு இன்று புறப்பட்டுச் செல்கிறார் டி. ராஜேந்தர். இதையடுத்து நடிகர் கமல் ஹாசன், டி. ராஜேந்தரை நேரில் சென்று நலம் விசாரித்தார். பிறகு ட்விட்டரில், நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே என்று வாழ்த்தி, டி. ராஜேந்தருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச்சந்தை கடும் சரிவு! சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது!

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT