செய்திகள்

சுஷாந்த் சிங் : இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

DIN

நடிகர் சுஷாந்த் சிங் ஜூன்14, 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மறைந்து இன்றோடு இரண்டு வருடங்கள் முடிவடைகிறது.

அவர் நடித்த முக்கியமான 6 படங்களைப் பற்றின ஒரு பார்வை.  

மகேந்திர சிங் தோனி : தி அன்டோல்ட் ஸ்டோரி  (தோனி)

சுஷாந்த் சிங் தோனி போல் நடித்து மக்களின் இதயங்களை வென்றார். சில நேரங்களில் அதில நடித்தது தோனியா சுஷாந்த் சிங்கா என்று தோன்றும்  அளவுக்கு அபாரமாக நடித்திருந்தார். தோனியைப் போலவே நடை பேச்சு ஆடும் விதம் என சின்ன சின்ன விசயங்களை கூட அருமையாக பின்பற்றி நடித்திருந்தார். தோனியின் வாழ்க்கை வரலாற்றை இவரைவிட யாரும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்ற அளவுக்கு நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.  

கேதர்நாத் (மன்சூர் கான்)

அவரது கள்ளங்கபடமற்ற முகமும் மேன்மையான நடிப்பும் காதல் கதைக்கு எளிதாக இருந்தது. சாரா அலிகான் அறிமுகமாகி இவருடன் நடித்த இப்படம் 2013இல் ஏற்பட்ட கேதர்நாத் வெள்ளம் குறித்து எடுக்கப்பட்டது. இப்படத்திலும் இவரது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

பீகே (சர்பராஸ் யூசூப்) 

ஆமிர் கான் இப்படத்தில் அட்டகாசமாக நடித்து படமும் மாபெரும் வெற்றிப் பெற்றது. இதில் பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த இவர் இந்தியப் பெண்ணை காதலிப்பது போல் வரும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அவரது அழகான நடிப்பிற்கு ரசிகர்களும் எளிமையான நேர்மையான குணத்திற்கு விமர்சகர்களிடையேவும் பேசப்பட்டார். 

கை போ சே (இஷான் பட்) 
தொலைக்காட்சியில் இருந்து முதன் முறையாக சினிமாவுக்கு வந்த படம் இதுதான். கிரிக்கெட்டில் பெரும் ஆர்வமிருந்தும் தோல்வியுற்ற கிரிக்கெட் வீரர் பயிற்சியாளராக மாறும் கதை. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பினைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சிசோரி (அனிரூத் பதக்) 
இது அவரது மிகப்பெரிய வணிக வெற்றியடைந்த படங்களுல் ஒன்றாக இருந்தது. அவரது மகன் எஞ்சினியரிங் தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலையை செய்ய முயற்சிப்பார். அவரை தேற்றி வாழ்க்கை பாடத்தை கற்றுத் தருவார். கல்லூரி வாழ்க்கை தற்போதைய வாழக்கையென இரண்டிலும் அபாரமாக நடித்து ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார்.

தில் பேச்சாரா (இமானுவேல்) 
புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் இவருக்கும் இடையேயான காதல். இவருக்கும் ஒருவகையான எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருகும் கதாப்பாத்திரம். இருவரும் இணைந்து படமெடுப்பார்கள். இதில் ரஜினிகாந்த் போல நடிப்பார். படம் முழுவதும் தமிழ் வார்த்தையான சரி (செரி என உபயோகித்து இருபார்கள்) பயன்படுத்தியிருப்பார்கள். படத்தில் அந்த வார்த்தை அவர்களுக்கு பாசிட்டிவான ஆற்றலை தருமென்று சொல்லுவார்கள். 

இது அவரது மறைவிற்கு பிறகு வெளியான கடைசிப் படம். கோவிட் காரணமாக திரையரங்கில் வெளியாகவில்லை. ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 95 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இப்படம் சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT