முகப்பு
செய்திகள்

முழு நிலவன்று வானத்தில் பிரகாசிக்கிறாய் : சாரா அலிகான்

பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது முதல்பட கதாநாயகனான சுஷாந்த் சிங் ராஜ்புத் நினைவுநாளினில் அவரது புகைப்படத்தினைப் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:31 AM
படம்: டிவிட்டர்| சாரா அலி கான்
பகிர்:

பாலிவுட் நடிகை சாரா அலி கான் தனது முதல்பட கதாநாயகனான சுஷாந்த் சிங் ராஜ்புத் நினைவுநாளினில் அவரது புகைப்படத்தினைப் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். 

சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14, 2020 அன்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். அப்போது அவருக்கு வயது 34 என்பது குறிப்பிடத்தக்கது. 

சாரா அலி கான் தனது முதல் படத்தை சுஷாந்த் சிங் உடன் நடித்தார். அப்படத்தின் பெயர்- கேதர்நாத். இப்படத்தினை அபிஷேக் கபூர் இயக்கி 2018இல் வெளியாகியது. இந்து பெண், முஸ்லீம் ஆணை காதலிப்பது போன்ற கதை. 2013 அன்று கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினை அடிப்படையாகவும் அந்த காதலையும் தொடர்பு படுத்தி எடுக்கப்பட்ட படம் இருவரது நடிப்பும் பாராட்டப்பட்டது.

தான் சுஷாந்துடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து, “முதன் முறையாக கேமிராவுக்கு முன் நடிப்பதும், உனது தொலைநோக்கி வழியாக நிலவையும் செவ்வாய் கிரகத்தை பார்த்ததுமென எத்தனையோ முதல்முறை நிகழ்வுகள்  நடந்துள்ளன. அனைத்துக்கும் காரணம் நீ. இது போன்ற எல்லா நிகழ்வுகளுக்கும் நன்றி.

முழுநிலவு நாளான இன்று வானத்தை பார்ப்பேன். நீ அங்கு உனக்கு பிடித்தமான நட்சத்திரங்களுடனும் விண்மீன் குழுவிடனும் இருப்பாயென எனக்குத் தெரியும். இப்போதும் எப்போதும் போல பிரகாசமாய் ஒளிர்வாயாக” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரா அலி கான் எழுதியுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.