செய்திகள்

வெளியானது பிரம்மாஸ்திரம் பட டிரெய்லர்

ரன்பீர் கபூர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரம் பட டிரெய்லர் வெளியானது  

DIN

ரன்பீர் கபூர், ஆலியா பட் இணைந்து நடித்துள்ள பிரம்மாஸ்திரம் பட டிரெய்லர் வெளியானது 

ஹிந்தியில் மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் படம் பிரமாஸ்திரா. தமிழில் பிரம்மாஸ்திரம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. 3 பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகர்ஜூனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன்ஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது. அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் ரன்பீர் சிங் சிவனின் அவதாரமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிரியா தலைநகரில்... இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதலில் 6 வீரர்கள் பலி!

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 17 மாவட்டங்களில் மழை!

வாக்குகளைத் திருடியே வெற்றி பெறுகிறார் மோடி; ஆதாரத்துடன் வெளிக்காட்டுவோம்! -ராகுல் சவால்

மகாராஷ்டிரம் - சத்தீஸ்கர் எல்லையில்.. 4 நக்சல்கள் சுட்டுக்கொலை!

இனிய தொடக்கம்... காவ்யா அறிவுமணி!

SCROLL FOR NEXT