செய்திகள்

ரஜினிகாந்த்தின் 'ஜெயிலர்' படக் குழுவில் இணைந்ததை அதிகராப்பூர்வமாக அறிவித்த பிரபலம்

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் கலை இயக்குநரும் நடிகருமான டிஆர்கே கிரண் இணைந்துள்ளதை மறைமுகமாக அறிவித்துள்ளார். 

DIN

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் கலை இயக்குநரும் நடிகருமான டிஆர்கே கிரண் இணைந்துள்ளதை மறைமுகமாக அறிவித்துள்ளார். 

இயக்குநர் நெல்சனின் டாக்டர், பீஸ்ட் படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியவர் டிஆர்கே கிரண். குறிப்பாக பீஸ்ட் படத்தில் டிஆர்கே கிரண் உருவாக்கிய வணிக வளாகத்தின் செட் பாராட்டுக்களைப் பெற்றது.

மேலும் கோ, வலிமை, வேலையில்லாத பட்டதாரி, வலிமை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஜெயிலர் பட போஸ்டரை பகிர்ந்த கிரண், 'என்னுடைய கனவு' என  மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நெல்சன் படங்களில் தொடர்ந்து பணியாற்றிவரும் டிஆர்கே கிரண் ஜெயிலர் படத்திலும் இணைவது உறுதியாகியுள்ளது. 

ஜெயிலர் படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். பேட்ட, தர்பார் படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக ரஜினிகாந்த் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

கேப்டன் கூல் தோனி மாதிரி ஆக விரும்பும் பாகிஸ்தான் மகளிரணி கேப்டன்!

1500 முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திரைப்படம் எது தெரியுமா?

உள்கட்சி பூசல்களை களைய வேண்டும்: தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

ஜிஎஸ்டியால் எகிறப்போகும் ஏசி விற்பனை! ரூ.2,500 வரை குறையும் என எதிர்பார்ப்பு!!

SCROLL FOR NEXT