வெளியானது நடிகர் விஜய்யின் 'வாரிசு' முதல் பார்வை போஸ்டர்
நடிகர் விஜய்யின் வாரிசு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் ஒரு பாடல் பாடவிருக்கிறாராம். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு இந்தப் படத்தை தயாரிக்கிறாராம்.
இதையும் படிக்க | தனுஷைப் பாராட்டுகிறேன் - ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த இளையராஜா
Advertisement
Advertisement
குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும்படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.