செய்திகள்

'உங்கள் ஆசி எனக்கு உண்டு' - 'விக்ரம்' குறித்து இளையராஜாவின் பாராட்டுக்கு கமல் நெகிழ்ச்சி

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துசொன்ன இளையராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். 

DIN

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்துசொன்ன இளையராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். 

விக்ரம் படத்துக்கு வாழ்த்து சொல்லும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ''வெற்றிகள் தொடர்ந்து குவியட்டும் சகோதரரே. மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது. அதோடு உங்கள் மலர்ந்த முகம் காணக்காண சந்தோஷமாக இருக்கிறது. விக்ர மாமுகம் தெரியுதே - அது வெற்றிப் புன்னகை புரியுதே என மாற்றிக்கொள்ளலாம் என தனது தெரிவித்திருந்தார். 

அவருக்கு பதிலளித்த கமல்ஹாசன், ''நம் அன்பை எப்போதாவதுதான் நாம் பிரகடனப்படுத்திக்கொள்வோம். என்றென்றும் என் அன்பு உங்களுக்கும், உங்கள் ஆசி எனக்கும் உண்டு என உணர்ந்த உங்கள் தம்பிகளில் நானும் ஒருவன். நம் பயணம் என்றும்போல் தொடர விழையும் உங்கள் நான்.'' என்று குறிப்பிட்டுள்ளார். 

1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் படத்துக்கு இளையராஜா தான் இசையமைப்பாளர். அந்தப் படத்தில் இடம்பெற்ற விக்ரம் என்ற தலைப்பு பாடல் கணினி முறையில் இசையமைக்கப்பட்ட முதல் இந்திய பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலானது தற்போது வெளியான விக்ரம் படத்தில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் கமல்ஹாசன் பல மேடைகளில் இளையராஜாவின் இசைத் திறமைகளை சிலாகித்து பேசியிருக்கிறார். இருவரும் இணைந்து கடைசியாக சபாஷ் நாயுடு என்ற படத்துக்காக பணிபுரிவதாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்தப் படம் கைவிடப்பட்டது ரசிகர்களிடையே ஏமாற்றமளித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

SCROLL FOR NEXT