செய்திகள்

அடுத்தடுத்து அறிவிக்கப்பட்ட சிம்பு படங்களின் வெளியீட்டுத் தேதி - என்ன நடக்கிறது?

சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் மஹா ஆகிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

சிம்புவின் வெந்து தணிந்தது காடு மற்றும் மஹா ஆகிய படங்களின் வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துமுடித்துள்ளார். தற்போது பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்துவருகிறார். 

இதனிடையே தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. முன்னதாக இந்தப் படம் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துடன் வெளியாகும் என்று கூறப்பட்டது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சிம்பு - தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக இருவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜெயமோகன் கதை எழுதியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பிறகு சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியாகும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் ஹன்சிகாவின் 50வது படமான மஹா படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். பலமுறை இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது மஹா திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து சிம்பு படங்களின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

ஆடிப் பெருக்கு: தாமிரவருணி கரையோரங்களில் சிறப்பு வழிபாடு

கல்லிடைக்குறிச்சியில் எஸ்டிபிஐ பூத் கமிட்டி கலந்தாய்வுக் கூட்டம்

திசையன்விளையில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்

கால்வாயில் காா் கவிழ்ந்து 11 போ் உயிரிழப்பு; நால்வா் காயம்

SCROLL FOR NEXT