செய்திகள்

விக்ரம் வெற்றியால் அடுத்தடுத்த படங்களில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி?

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்தடுத்து கமல்ஹாசன் படங்களில் வில்லனாக விஜய் சேதுபதியா?

DIN

விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் நடிகராக வெற்றி பெறுவதில்  தீவிரமாக இருக்கிறார் கமல்ஹாசன்!

விக்ரம் வெற்றியின் காரணமாக முடங்கிக் கிடந்த அவருடைய திரைப்படங்கள் எல்லாம் உயிர் பெறத் தொடங்கியுள்ளன.

இந்த வகையில் தேவர் மகன் -2, இந்தியன் - 2 , சபாஷ் நாயுடு போன்ற படங்கள் ஒவ்வொன்றின் படப்பிடிப்பும்  அடுத்தடுத்துத் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, ஏற்கெனவே, மகேஷ் நாராயணன் இயக்கத்தில் மற்றொரு படத்துக்கு கமல் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்தியன் - 2 படத்திலும் தேவர் மகன் - 2  படத்திலும் வில்லனாக நடிப்பதற்காக விஜய் சேதுபதியை படக் குழுவினர் அணுகியுள்ளதாகவும் விரைவில் அறிவிப்பு வரலாம் என்றும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, ரஜினிகாந்த், விஜய் ஆகியோரின் மெகா ஹிட் படங்களில் வில்லனாகத் தோன்றித் தடம் பதித்த விஜய் சேதுபதி, வெற்றிப் படமான விக்ரமில் கமலுக்கும் வில்லனாக நடித்தார்.

புதிய அறிவிப்புகள் வெளியாகும்போது, விஜய் சேதுபதியின் வில்லன் பயணம் உறுதிப்படும்.

மேலும், பிற மொழிகளிலும் விக்ரம் பெற்ற வெற்றியின் காரணமாக, புதிய படங்களும் பிற மொழிகளிலும் வர வேண்டும் என்றும் கமல்ஹாசன் விரும்புவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி

பொங்கல் : போகி பண்டிகைக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

SCROLL FOR NEXT