முகப்பு
செய்திகள்

''என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்....'' நடிகர் அருண் விஜய் நெகிழ்ச்சி

நடிகர் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த தடம் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி வெளியாகியிருந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
பகிர்:

நடிகர் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த தடம் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகளாகிறது. 

இந்த நிலையில் அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தடம் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து, உங்கள் அன்புக்கு நன்றி. தடம் வெளியாகி 3 ஆண்டுகளாகிறது. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. மறக்க முடியாத படமும் கூட. எழில் மற்றும் கவின் ஆக நடித்ததில் மகிழ்ச்சி. என்று குறிப்பிட்டுள்ளார். 

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய இந்தப் படத்தில் அருண் விஜய் கவின் எழில் என இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். இந்தப் படத்தில் தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், யோகி பாபு, வித்யா பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. 

முழு கட்டுரையைப் படிக்க →