நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதனையடுத்து நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் இணையும் படத்துக்கு தற்காலிகமாக ஏகே 61 என அழைத்து வருகின்றனர். வலிமை படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் ஏற்பட்ட மனக் கசப்பால் இந்தப் படத்துக்கு வேறு இசையமைப்பாளர் இசையமைக்கவிருக்கிறார்.
இதையும் படிக்க | ''இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்'': வித்தியாசமாக அறிவித்த நடிகர்
அனிருத் அல்லது ஜிப்ரான் இசையமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் நடிகர் கவின் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். இந்தத் தகவலை அவரது ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
இன்னும் சில வாரங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்காக நடிகர் அஜித் 35 கிலோ வரை எடை குறையவிருக்கிறாராம். தற்போது 10 கிலோ எடை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் இயக்குநர் வினோத் பட பாணியில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.