செய்திகள்

''ஷாருக்கான் மகனுக்கு எதிராக ஆதாரமில்லை'' : விசாரணைக்குழு தகவலால் பரபரப்பு

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இல்லை என சிறப்பு விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. 

DIN

ஹிந்தி நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கடந்த வருடம் அக்டோபர் மாதம் சொகுசு கப்பலில்  போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு மாத சிறை தண்டனைக்கு பிறகு பிணையில் வெளியே வந்தார். 

ஆர்யன் கான் வழக்கை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. இவ்விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்து வருகின்றன. 

அதன்படி, ஆர்யன் கான் போதைப் பொருள் தொடர்பாக பெரிய அளவில் எந்தவிதமான சதியிலும் ஈடுபடவில்லை என்றும் அவருக்கும் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.  

மேலும் ஆர்யன் கானை கைது செய்யப்பட்டதிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாம். ஆர்யன் கானிடம் நடைபெற்ற சோதனையில் விடியோ பதிவு செய்திருக்க வேண்டும் ஆனால் விடியோ எடுக்கப்படவில்லை. 

மேலும் ஆர்யன் கானிடம் இருந்து போதைப் பொருள் கைப்பற்றப்படவில்லை. அதனால் அவரது போனை பறிமுதல் செய்து சோதனை செய்திருக்க வேண்டியதில்லை. இவ்வாறு தெரிவித்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT