செய்திகள்

பிக்பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளராக நுழையும் லாஸ்லியா

பிக்பாஸ் அல்டிமேட்டில் லாஸ்லியா வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். அவரது இயல்பான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் அவருக்காக சமூக வலைதளங்களில் ஆர்மியெல்லாம் துவங்கினர்.

நிகழ்ச்சியில் கவினுடன் காதல் என பரபரப்பாக பேசப்பட்டார். கவின் - லாஸ்லியா காதல் காரணமாக பிக்பாஸ் சீசன் 3 ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாக இருக்கிறது.  பிக்பாஸ்க்கு பிறகு இருவரும் பேசிக்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹர்பஜன் சிங்குடன் இணைந்து லாஸ்லியா நடித்த ஃபிரெண்ட்ஷிப் படம் கடந்த வருடம் வெளியாகியிருந்தது. தற்போது கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் லாஸ்லியா வைல்டு கார்டு மூலம் போட்டியாளராக நுழையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மூன்வாக் - மினி கேசட் விடியோ!

கொடநாடு வழக்கில் 3 பேருக்கு பிடிவாரண்ட்

குடிநீா் மேல்நிலைத் தொட்டிகளில் மீட்டா் பொருத்த பாஜக கோரிக்கை

நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கயம், வெள்ளக்கோவிலில் ஆா்ப்பாட்டம்

நேரடி வரி வசூல் 8% அதிகரித்து ரூ.17.04 லட்சம் கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT