செய்திகள்

''என்னை வெறுக்கப்போவது நிச்சயம்'': 7 ஆண்டுகளுக்கு பிறகு சின்னத்திரையில் வில்லியாக களமிறங்கும் நடிகை

என்னை வெறுக்கபோவது நிச்சயம் என சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் நடிகை தெரிவித்துள்ளார்.  

DIN

சின்னத்திரை தொடர்களில் எதிர்மறை கதாப்பாத்திரங்களில் அதிகம் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பூஜா. நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீரா தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். 

மீரா தொடர் வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்தத் தொடர் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கேமராவுக்கு மூன் மீண்டும் வந்துவிட்டேன். அதுவும் மீண்டும் தமிழில்.... நான் மிக விரும்பு ஒன்றிற்கு என்னை அழைத்து வந்ததற்கு நடிகை குஷ்புவிற்கு நன்றி. 

இந்த 7 ஆண்டுகளில் நிறைய மாறிவிட்டன. ஒவ்வொன்றையும் நேசிக்கிறேன். எப்பொழுதும் உங்களது ஆதரவு தேவை. ஆம் நீங்கள் என்னை வெறுக்கப்போகிறீர்கள். மீரா தொடரானது வருகிற மார்ச் 28 ஆம் தேதி முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.'' என்று தெரிவித்துள்ளார்.   

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகவிருக்கும் மீரா தொடரில் நடிகை குஷ்பு முதன்மை வேடத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், அந்தத் தொடரின் கதையையும் அவர் எழுதியுள்ளார். இந்தத் தொடரில் பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகருமான சுரேஷ் மேனன் குஷ்புவின் கணவராக நடித்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கால்பந்து ரசிகை... வின்சி அலோசியஸ்!

ஹரியாணாவில் அரசு மருத்துவர்கள் போராட்டம்: நோயாளிகள் பாதிப்பு!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

விண்டேஜ் கார் பேரணி - புகைப்படங்கள்

நீலாம்பரி என்ற தலைப்பில் படையப்பா -2... ரஜினி கொடுத்த மாஸ் அப்டேட்!

SCROLL FOR NEXT