முகப்பு
செய்திகள்

சிவகார்த்திகேயனை பாராட்டிய நடிகர் விஜய்

தன்னை நடிகர் விஜய் பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய அரபிக் குத்து பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான குறுகிய காலத்தில் யூடியுபில் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்தப் பாடலை அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி பாடியுள்ளனர். 

இந்த நிலையில் விருது வழங்கும் விழா ஒன்றில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவரிடம் அரபிக் குத்து பாடல் குறித்து விஜய் என்ன சொன்னார் என்று கேட்டார். 

அதற்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன், ''அரபிக் குத்து பாடலை முன்பே படமாக்கிவிட்டார்கள். பாடல் குறித்து நடிகர் விஜய் சாரின் கருத்தை என்னால் அறியமுடியவில்லை. சமீபத்தில் ப்ரமோ விடியோவை படமாக்கினோம். அப்போதுதான் விஜய் சார் தொலைபேசியில் சூப்பர் பா, எழுதிக்கொடுத்ததற்கு நன்றி பா. அரபிக் எல்லாம் பயங்கரமா எழுதுறியே என்றார். 

அரபிக் குத்து பாடல் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. முதல் முறை கேட்டதும் இது பெரிய ஹிட் ஆகும் என்று இசையமைப்பாளர் அனிருத்திடம் நடிகர் விஜய் சார் கூறியிருக்கிறார்'' என்று பேசினார். 

முழு கட்டுரையைப் படிக்க →