செய்திகள்

''பொண்ணுங்கள மதிக்க என் பசங்களுக்கு கத்துக்கொடுத்துருக்கேன்'': ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பதிவு வைரல்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் பாடல் ஒன்றை இயக்கினார். இந்தப் பாடல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. 

இந்தப் பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைக்க ஜானி நடனம் அமைத்துள்ளார். தமிழில் அனிருத் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். இந்த நிலையில் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் காரணமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதன் ஒரு பகுதியாக மருத்துவமனையில் இருந்தபடி மகளிர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை அவர் எழுதியுள்ளார். 

அதில், ''கரோனாவுக்கு பிறகான உடல்நலக்கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள என்ன கவனித்துக்கொள்ளும் இந்த அழகான செவிலியர்களுடன் மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறேன். பராமரிப்பதும், கவனித்துக்கொள்வதும் பெண்களின் பிறப்பிலிருந்து வருவது. ஒவ்வொரு பெண்களும் அவர்களது பணிகளுக்கு ஏற்ப அளவற்ற அன்புடன் கொண்டாடப்பட வேண்டும். 

என் மகன்களுக்கு அவர்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு பெண்களையும் மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்திருக்கிறேன். உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களை நேசியங்கள். வாழ்க்கை திரும்ப உங்களுக்கு அன்பைக் கொடுக்கும். அனைத்து சிறப்பான பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்குகள் மோதல்: இளைஞா் மரணம்

பால் விலையை உயா்த்தாத அரசைக் கண்டித்து போராட்டம்: தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா்

பெற்றோரை கவனிக்காவிட்டால் சம்பளத்தில் 10-15% பிடித்தம்: தெலங்கானா முதல்வர் எச்சரிக்கை

எல்லையில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்!

ஜாம்ஷெட்பூரில் புதிய வீட்டுவசதித் திட்டத்தை அறிவித்த ஆஷியானா ஹவுசிங்!

SCROLL FOR NEXT