கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'மாறன்' திரைப்படம் வருகிற 11 ஆம் தேதி நேரடியாக டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதையும் படிக்க | ரஷியாவுக்கு எதிரான போரில் மக்களைக் காக்க சண்டையிட்ட உக்ரைன் நடிகர் மரணம்: சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக ஊடகங்களுக்கு நடிகை மாளவிகா மோகனன் பேட்டியளித்து வருகிறார். இந்த நிலையில் 'மாறன்' படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து பேசிய அவர், ''இந்தப் படத்தில் நான் நடிக்க தனுஷ்தான் காரணம், இயக்குநர் கார்த்திக் நரேனிடம் தாரா என்ற வேடத்துக்கு நான் சரியாக இருப்பேன் என்று தனுஷ் கூறியிருக்கிறார்'' என பகிர்ந்து கொண்டார்.
'மாறன்' படத்தில் முதலில் பாடலாசிரியர் விவேக் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் 'மாறன்' படத்திலிருந்து விலகிவிட்டதாக விவேக் அறிவித்திருந்தார். இந்தத் தகவல் தனுஷ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, மகேந்திரன், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.