செய்திகள்

''அவர் கூட இருந்தால் சோர்வே தெரியாது'' : விஜய் டிவி புகழுடன் கிரிக்கெட் வீரர் நடராஜன்

விஜய் டிவி புகழுடன் இருக்கும் புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் நடராஜன் புகைப்படம் பகிர்ந்துள்ளார். 

DIN

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருக்க கிடைத்த வரவேற்பால் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தன்னுடன் குக் வித் கோமாளியில் பங்கேற்ற அஸ்வின் குமாருடன் என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்திருந்தார். 

இதனையடுத்து நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் நாளை (மார்ச் 10) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் ப்ரமோக்களில் புகழின் நகைச்சுவை காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 

எதற்கும் துணிந்தவன் படத்தைத் தொடர்ந்து புகழ் நடிப்பில் யானை, ஏஜெண்ட் கண்ணாயிரம், காசேதான் கடவுளடா என அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ளன. 

இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். அண்ணன் புகழ் நம்முடன் இருக்கும்போது  சோர்வான தருணங்களே இருக்காது. கலகலப்பாக இருக்கும்.

என்னுடைய அழைப்பை ஏற்று எங்கள் வீட்டிற்கு வந்ததற்கு நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சிவகார்த்திகேயன், சதிஷ், யோகிபாபு உள்ளிட்டோரையும் நடராஜன் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT