செய்திகள்

வெங்கட் பிரபுவின் 'மன்மத லீலை' படத்தை இவங்கலாம் பார்க்க முடியாதா? என்ன காரணம்?

DIN

'மாநாடு' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம் 'மன்மத லீலை'. அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. 

இந்தப் படத்தில் அசோக் செல்வனுடன் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிருதி வெங்கட், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு பிரேம்ஜி இசையமைக்க, தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தப் படத்துக் கதை, திரைக்கதை வசனத்தை வெங்கட் பிரபு மற்றும் மணிவண்ணன் சுப்ரமணியம் இணைந்து எழுதியுள்ளனர். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு தணிக்கைத்துறை ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் இந்தப் படத்தை திரையரங்குகளில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க முடியாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT