முகப்பு
செய்திகள்

சிரஞ்சீவி படத்தில் நடிக்கும் சல்மான் கான்

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடிக்கவுள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:45 PM
பகிர்:

மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் காட்ஃபாதர் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடிக்கவுள்ளார்.

கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இதையடுத்து தமிழ் இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் காட்ஃபாதர் என்கிற படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளப் படமான லுசிஃபர் படத்தின் ரீமேக் இது. இசை - தமன். ஒளிப்பதிவு - நிரவ் ஷா. 

காட்ஃபாதர் படத்தில் சிறிய வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார். படப்பிடிப்புத் தளத்துக்கு வந்த சல்மான் கானை சிரஞ்சிவீ வரவேற்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இரு பெரிய நடிகர்கள் நடிப்பதால் காட்ஃபாதர் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →