செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்: வெளியீடு குறித்து புதிய அறிவிப்பு

விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படம் மே மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படம் மே மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. 

பல காரணங்களால் இதன் வெளியீட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மே மாதம் மாமனிதன் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் திரையரங்கு உரிமையை ஸ்டூடியோ 9 சுரேஷ் பெற்றிருப்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நான் பார்த்து வியந்த படம் தர்மதுரை. அதன்பின்பு இப்படி ஒரு படமா மாமனிதன் என்று வியந்தேன். நன்றிகள் பல இயக்குனர் சீனு ராமசாமி அவர்களுக்கு. மற்றும் மாமனிதன் மட்டுமல்ல மகா நடிகன் நீ விஜய் சேதுபதி. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தேசிய விருது நிச்சயம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

பிடாரி அம்மன் கோயில் குடமுழுக்கு

நாளைய மின்தடை: டாடாபாத்

கடை உரிமையாளா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.10 கோடி மோசடி: இளைஞா் கைது

நாளைய மின்தடை: ஈரோடு, கவுந்தப்பாடி, விஜயமங்கலம்

SCROLL FOR NEXT