Are you the one who gives passwords to friends? Netflix Action Results 
செய்திகள்

நண்பர்களுக்கு பாஸ்வேர்டை கொடுப்பவரா நீங்கள்? அதிரடி காட்டும் நெட்பிளிக்ஸ்

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தங்களது கணக்குகளின் கடவுச்சொல்லை யாருக்கும் பகிர வேண்டாம் என பயனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

DIN

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் தங்களது கணக்குகளின் கடவுச்சொல்லை யாருக்கும் பகிர வேண்டாம் என பயனர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஓடிடி நிறுவனம் நெட்பிளிக்ஸ். உலகம் முழுவதும் 1.4 கோடி பயனர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. 

கரோனா தொற்று பரவலின் போது விதிக்கப்பட்ட பொதுமுடக்க காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடி தளங்கள் பிரபலமடைந்தன. சர்வதேச படங்களையும் எளிமையான முறையில் காண வசதியுள்ளதால் கடந்த 2 ஆண்டுகளில் ஓடிடி தளங்களின் வளர்ச்சி வேகமாக முன்னேறியுள்ளது. பல புதிய திரைப்படங்களும் அவ்வப்போது வெளியாவதால் ஒரே ஓடிடி தளத்தின் கணக்கை பலரும் கடவுச்சொல்லை உபயோகித்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பயனர்கள் தங்களது கடவுச் சொற்களை பகிர்வது தங்களது வருவாயை பாதிப்பதாக நெட்பிளிக்ஸ் தெரிவித்துள்ளது. 

ஒரே கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் நெட்பிளிக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருவது சமீபகாலங்களில் அதிகரித்துவருவதாக தெரிவித்துள்ள அந்நிறுவனம் பயனர்களின் இந்த நடவடிக்கையை தடுக்க முனைப்பு காட்டி வருகிறது.

அதன் ஒருபகுதியாக பயனரின் இடத்தைத் தவிர கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பிற இடங்களில் உபயோகப்படுத்தப்படும் நெட்பிளிக்ஸ் கணக்குகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani வார ராசிபலன்! | Oct 5 முதல் 11 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

சன்பிளவர்ஸ்... சான்யா மல்ஹோத்ரா!

வார பலன்கள் - ரிஷபம்

வார பலன்கள் - மேஷம்

கரூர் பலி: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

SCROLL FOR NEXT