செய்திகள்

வெளியானது ‘ஜாலியோ ஜிம்கானா’

நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் சனிக்கிழமை வெளியானது.

DIN

நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் 'ஜாலியோ ஜிம்கானா' பாடல் சனிக்கிழமை வெளியானது.

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் பெறும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியான அரபிக் குத்து பாடல் ஒரு மாதத்திற்கு பிறகும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. நடிகர் விஜய் பாடியுள்ள இந்த பாடல் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜாலியோ ஜிம்கானா முழு பாடலும் சனிக்கிழமை வெளியானது. இந்தப் பாடலை பாடலாசிரியர் கு.கார்த்திக் எழுதியுள்ளார். அரபிக் குத்து பாடலைத் தொடர்ந்து இந்தப் பாடலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, இயக்குநர் செல்வராகவன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே, விடிவி கணேஷ், பிஜோர்னோ, அபர்ணா தாஸ், ஷைன் டாம் சக்கோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார்.  இந்தப் படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்குவரவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 8

ரஃபீனியா - லாமின் யமால் அசத்தல்: தொடர் ஆதிக்கத்தில் பார்சிலோனா!

முடி உதிர்தல் பிரச்னையா? முதலில் காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்!

புதிய தொடரில் நாயகியாகும் பவித்ரா அரவிந்த்!

மார்கழி மாதப் பலன்கள்: மீனம்

SCROLL FOR NEXT