செய்திகள்

தலைவரே ! கல்யாணியுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா: கலாய்த்த பிரேம்ஜி

கல்யாணி பிரியதர்ஷனுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை எஸ்.ஜே.சூர்யா பகிர, பிரேம்ஜி அவரது பாணியில் கலாய்த்துள்ளார். 

DIN

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே.சூர்யா நடித்த 'மாநாடு' திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

எஸ்.ஜே.சூர்யா பேசும் 'தலைவரே தலைவரே' என்ற வசனம் மீம்ஸ்களாக கலக்கிக்கொண்டிருக்கிறது. மேலும், நடிகர் சிம்புவுக்கு 'மாநாடு' திரைப்படத்தின் வெற்றி திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். 

இந்த நிலையில் கல்யாணி பிரியதர்ஷனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ''வணக்கம் கல்யாணி, இந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்வதில் மகிழ்ச்சி. நீ பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறாய். நீ கடினமாக உழைத்து சரியான உடலமைப்புடன் இருக்கிறாய். ஹிந்தி பட நடிகர்களுடன் ஜோடி சேர்வதற்கு சரியான தருணம். வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

அவரது பதிவுக்கு பிரேம்ஜி, 'மாநாடு' படத்தில் எஸ்ஜே சூர்யா பேசும் தலைவரே என்ற வசனத்தை பகிர்ந்துள்ளார். ''உங்களை மிஸ் செய்தோம்'' என எஸ்.ஜே.சூர்யா சொல்ல, அதற்கு பிரேம்ஜி, ''நான் ஊரில் இல்லை. விரைவில் சந்தித்து கொண்டாடுவோம்'' என பதிலளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐடி பங்குகள் உயர்வு! இன்றைய பங்குச் சந்தை நிலவரம்...

ஊழியர்களைக் கட்டிப்போட்டு வங்கியில் பணம், நகை கொள்ளை!

கரூரில் இன்று மாலை திமுக முப்பெரும் விழா! குளித்தலை சிவராமன் இல்லம் சென்று உதயநிதி ஆறுதல்!!

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

SCROLL FOR NEXT