'ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.500 கோடி': மோசடி நபரிடம் கோடிக்கணக்கில் ஏமாந்த தமிழ் நடிகர்
மோசடி கும்பலிடம் பிரபல தமிழ் நடிகர் கோடிக்கணக்கில் ஏமாந்துள்ளார்.
'கிழக்கு சீமையிலே', 'பசும்பொன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விக்னேஷ். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான 'பூவே உனக்காக' தொடரிலும் நடித்திருந்தார்.
தற்போது சென்னையில் சொந்த தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் தனது தொழில் மூலமாக பழக்கமான ராம் பிரபு என்பவர், ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் இரிடியம் விற்பனை செய்துள்ளதாக அவரிடம் கூறியுள்ளார்.
இதையும் படிக்க | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
Advertisement
Advertisement
மேலும் தன்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால் ரூ.500 கோடி லாபம் கிடைக்கும் என்று நடிகர் விக்னேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பி ரூ.1.82 கோடியை கொடுத்துள்ளார். நடிகர் விக்னேஷின் நண்பர்களும் ராம் பிரபுவிடம் சில லட்சங்களை கொடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | நினைவு தினம்: விசுவுடனான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பிரபலங்கள்!
பின்னர் ராம் பிரபுவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே விசாரித்தபோது, ஏற்கனவே பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர் என்பது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விக்னேஷ் தனது பணத்தை மீட்டு தருமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.