செய்திகள்

''ஆர்ஆர்ஆர்' படத்தை புறக்கணியுங்கள்'': கர்நாடக ரசிகர்கள் ஆவேசம்: காரணம் இதுதான்

DIN

'பாகுபலி'க்கு பிறகு ராஜமௌலி இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியிருக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இந்தப் படம் வருகிற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்திய அளவில் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 'ஆர்ஆர்ஆர்' வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கர்நாடகாவில் கன்னட மொழியில் மொழிமாற்றம் செய்யப்படாமல் நேரடியாக தெலுங்கிலேயே வெளியாகவிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

இதனையடுத்து 'ஆர்ஆர்ஆர்' படத்தை கர்நாடகாவில் புறக்கணியுங்கள் என ஹேஷ்டேக் உருவாக்கி ட்விட்டரில் கன்னட ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக கர்நாடகாவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட கன்னட உச்ச நட்சத்திரமான சிவராஜ்குமார், ராஜமௌலியிடம் ஆர்ஆர்ஆர் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்திருந்தார்.  

மேலும் கேஜிஎஃப்  2 திரைப்படம் ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாகவிருக்கிறது. இதனிடையே கர்நாடகாவில் ஆர்ஆர்ஆர் படத்தை எதிர்த்தால், நாங்கள் கேஜிஎஃப் 2 படத்தை புறக்கணிப்போம் என தெலுங்கு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT