முகப்பு
செய்திகள்

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் அமிதாப் பச்சன்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:


நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரித்து நடித்திருக்கும் படம் 'விக்ரம்' வருகிற ஜுன் 3 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், அஞ்சாதே நரேன், ஷிவானி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்க, கிரிஸ் கங்காதரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தில் நடிகர் அமிதாப் பச்சன் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளாராம். இதற்காக ஒரு நாள் மட்டும் 'விக்ரம்' படப்பிடிப்பில் அமிதாப் கலந்துகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 

ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தத் தகவல் உண்மையாக இருந்தால்  கமல்ஹாசனும் அமிதாப் பச்சனும் இணையும் இரண்டாவது படமாக விக்ரம் இருக்கும். முன்னதாக கிராஃப்தார் என்ற ஹிந்தி படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.