செய்திகள்

''நீங்கள் நடுநிலை என்றால்....'' : இயக்குநர் வெற்றிமாறன் அதிரடி

கேரளாவில் நடைபெற்றுவரும் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு வைரலாகி வருகிறது.  

DIN

தமிழ் சினிமாவில் 'ஆடுகளம்', 'விசாரணை', 'அசுரன்' என சிறந்த படைப்புகளை கொடுத்து வருபவர் வெற்றிமாறன். அவரது படங்களில் சமூகம் மற்றும் அரசியல் ரீதியான கருத்துகள் இடம்பெற்று வருகின்றன. 

அந்த வகையில், கேரளத்தில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, ''இன்றைய உலகம் பிளவுபட்டுள்ளது. நீங்கள் வலது சார்பு அல்லது இடது சார்பை ஏற்கிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். நடுநிலை என்று சொன்னால், நீங்கள் வலது சார்புடையவர் என்றே அர்த்தமாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

'விடுதலை' படத்தை இயக்கியுள்ள வெற்றிமாறன் தற்போது சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தின் ஒத்திகையில் ஈடுபட்டுவருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றுவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழையன கழிதல்!

சா்க்கரை ஆலைக்கு தலைமை நிா்வாகியை நியமிக்க வலியுறுத்தல்

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT