செய்திகள்

விஜய் சேதுபதி படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்: இயக்குநர் நெகிழ்ச்சி

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

DIN

'தர்மதுரை' படத்துக்கு பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'மாமனிதன்'. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தை நடிகர் ஆர்.கே. சுரேஷ் தனது ஸ்டுடியோ 9 நிறுவனம் சார்பாக வெளியிடுகிறார். முதலில் இந்தப் படம் மே 6 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் விஜய் சேதுபதியின் மற்றொரு படமான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாவதால் 'மாமனிதன்' பட வெளியீடு மே 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் 'மாமனிதன்' படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளாராம். இதுகுறித்து இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஜனவரியில் 'மாமனிதன்' படம் பார்த்து பாராட்டி, நெகிழ்வாக தொலைபேசியில் நீங்கள் பேசியதை வெளியே சொல்லவில்லை. அது விற்பனைக்காக நான் சொல்வதாக சொல்வார்கள். நீங்கள் படம் பார்த்ததே ஆசிகள் அதுபோதும் என்றேன்.

இன்று வெளியீட்டு தேதி தானாகவே விற்னையாவும் முடிந்தது சார் நன்றி ரஜினிகாந்த் சார்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT