செய்திகள்

சவால்விட்ட நடிகருக்கு விடியோ மூலம் பதிலளித்த சமந்தா

நடிகை சமந்தா உடற்பயிற்சி செய்யும் விடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

DIN

'தி ஃபேமிலி மேன் 2' தொடர், 'புஷ்பா' பட 'ஓ சொல்றியா மாமா' பாடல் ஆகியவற்றின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமாகியிருக்கிறார் சமந்தா. நாக சைதன்யாவுடனான பிரிவுக்கு பிறகு பரபரப்பாக படங்களில் நடித்து வருகிறார். 

காத்துவாக்குல ரெண்டு காதல் 

தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அனிருத் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கில் 'சகுந்தலம்' படத்தில் நடித்துள்ள அவர் அடுத்ததாக 'யசோதா' படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் முதன்மை வேடத்தில் சமந்தா நடக்கவிருக்கிறார். 

இருபால் ஈர்ப்பாளராக நடிக்கும் சமந்தா 

மேலும் 'அரெஞ்ச்மென்ட்ஸ் ஆஃப் லவ்' என்ற ஆங்கில படத்தில் இருபால் ஈர்ப்பாளராக சமந்தா நடிக்கவிருக்கிறாராம். இந்த செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது. பிலிப் ஜான் இந்தப் படத்தை இயக்க, குரு ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. 

டைகர் ஷெராஃப் விட்ட சவால் 

இந்த நிலையில் நடிகை சமந்தா உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்யும் விடியோவை பகிர்ந்துள்ளார். அதில் எனக்கு சவால்விட்டதற்கு நடிகர் டைகர் ஷெராஃபிற்கு நன்றி. நான் நடிகர் அர்ஜூன் கபூருக்கு சவால்விடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT