செய்திகள்

அரபிக் குத்து பாடல் காணொளி: எகிறும் பார்வைகள் எண்ணிக்கை

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலின் காணொளி நேற்று மாலை வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

DIN


பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலின் காணொளி நேற்று மாலை வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு இசை - அனிருத்.

படம் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றதால் நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்குத் தனது வீட்டில் விருந்து வைத்தார் விஜய். 

படத்தின் கடைசியில் இடம்பெற்றுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடலின் காணொளி யூடியூப் தளத்தில் கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இந்தியா முழுக்க வரவேற்பைப் பெற்ற அரபிக் குத்து பாடலின் காணொளி நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் இப்பாடலின் காணொளிக்காக மிகவும் காத்திருந்ததால் வெளியானவுடன் குறைந்த நேரத்தில் 1 மில்லியன் பார்வைகளைத் தொட்டது. தற்போது 16 மணி நேரத்தில் 5 மில்லியன் (50 லட்சம்) பார்வைகளைப் பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வானுக்கு வரம்...

நெஞ்சில் மணக்கும் நினைவுகள்...

இரவில் கல்லறைக்கு பிரியாணி ஆர்டர் செய்த பெண்! டெலிவரி செய்ய மறுப்பு!

ஒரு நூலகம் மறைந்துவிட்டது!: கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்

பள்ளிச்சட்டம்பி படத்தின் கயாது லோஹர் போஸ்டர்!

SCROLL FOR NEXT