எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதா தனது காதலர் வீரேந்திர செளத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுடைய திருமணம், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் நடைபெற்றது.
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நமீதா, தான் கர்ப்பமாக இருப்பதை இன்ஸ்டகிராமில் தெரிவித்து புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
தாய்மை. புதிய அத்தியாயம் தொடங்கியதும் நான் மாறினேன். பிரகாசமான மஞ்சள் சூரியன் என்மீது பிரகாசித்தபோது புதிய வாழ்க்கை என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான். உனக்காகத்தான் இவ்வளவு நாள் வேண்டினேன். உன்னுடைய மென்மையான உதைகளை என்னால் உணர முடிகிறது என்று தாய்மை பற்றிய தனது உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.