முகப்பு
செய்திகள்

ஏகே 61: முக்கிய வேடத்தில் நடிகர் சமுத்திரக்கனி

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக நடிகர் சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.

Updated On : 13 மே, 2022 at 4:49 PM
பகிர்:

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

'நேர்கொண்ட பார்வை', 'வலிமை' படங்களுக்கு பிறகு இயக்குநர் வினோத், நடிகர் அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி இணைந்துள்ள படம் 'ஏகே 61'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் கடந்த ஏப்ரல் -11 ஆம் தேதி பூஜையுடன் துவங்கியது. 

வங்கிக் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாகவும் நடிகர் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

Advertisement

இந்நிலையில் அப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்து வருவதாக இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.