செய்திகள்

பிறந்த நாளன்று மரணமடைந்த தமிழ் நடிகை

லாக்டவுன் என்கிற தமிழ்ப் படத்தில் நடித்த நடிகை சஹானா, அவருடைய பிறந்த நாளன்று உயிரிழந்துள்ளார். 

DIN

லாக்டவுன் என்கிற தமிழ்ப் படத்தில் நடித்த நடிகை சஹானா, அவருடைய பிறந்த நாளன்று உயிரிழந்துள்ளார். 

மலையாளத்தில் இரண்டு படங்களும் தமிழில் இன்னும் வெளிவராத லாக்டவுன் என்கிற படத்திலும் நடித்துள்ளார் சஹானா. கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஒன்றரை வருடத்துக்கு முன்பு சஜாத் (31) என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 

20 வயது சஹானாவுக்கும் அவருடைய கணவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கோழிக்கோடு நகரிலிருந்து 14 கீ.மீ. தொலைவில் உள்ள அவருடைய வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார் சஹானா. பிறகு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. மே 12 அன்று சஹானாவின் பிறந்த நாள். அதே நாளில் அவர் மரணமடைந்துள்ளார். 

சஹானா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சஜாத், காவல்துறையிடம் கூறியுள்ளார். ஆனால் சஹாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் புகார் அளித்துள்ளார்கள். இதையடுத்து சஹானாவின் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாள வன்முறை: சிறைக்கு தீ வைத்து கைதிகள் தப்பியோட்டம்!

வரும் செப். 14-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு!

யார் இந்த மெல்லிடை நாயகி!

துபை இளவரசி... துஷாரா விஜயன்!

ஆக்சிஜன் சிலை... ஜான்வி!

SCROLL FOR NEXT