சென்னை: நேற்று ( மே-15) நடந்த விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் என்று சொன்னதுமே அரங்கம் அதிர்ந்தது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சென்னையில் நடந்தது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் லோகேஷின் முந்தைய படங்களை பற்றிப் பேசும்போது தளபதி விஜய் என்று சொன்னதுமே அரங்கம் அதிர்ந்தது. சிறிது நேரம் அவரால் எதுவுமே பேச முடியவில்லை. அவ்வளவு கைத்தட்டல்கள் விசில் சத்தங்கள். கமலும் ரசிகர் கூட்டததைப் பார்த்து சற்று பொறுங்கள் ஒரு நிமிஷம் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.