செய்திகள்

'எதாவது லாஜிக் இருக்கா?' சர்வதேச அளவில் கிண்டல் செய்யப்பட்ட பீஸ்ட்

DIN

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான பீஸ்ட் படம் கடந்த ஏப்ரல் 13 அன்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

படம் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றலும் இப்படம் கலவையான விமர்சனசங்களையே பெற்றுது. 

இதற்கடுத்து பீஸ்ட் படம்  நெட்பிளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடிகளில் வெளியான பின் மேலும் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்று(மே-16) இந்தப் படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்று இணையத்தில் வைரல் ஆனது.

சம்பந்தப்பட்ட அக்காட்சியில் நடிகர் விஜய்  பாகிஸ்தான் சென்று தீவிரவாதியைப் பிடித்து வருவார். அப்போது, ஹெல்மெட் அணியாமல் ஜெட் விமானத்தை ஓட்டிவருவதும் இன்னொரு விமானிக்கு பறந்துகொண்டிருக்கும்போதே கை காட்டும் காட்சி இடம்பெற்றிருக்கும்.

இக்காட்சியை  ஓய்வுப்பெற்ற இந்திய விமானப் படை விமானி சிவராமன் சஜ்ஜன் ‘எனக்கு பல கேள்விகள் இருக்கின்றன’ எனப் பகிர்ந்ததும் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் துவங்கியது.

இதைப் பார்த்த பாகிஸ்தான் மற்றும் பிற இதர நாடுகளைச் சேர்ந்தவர்கள்  “மணிக்கு 1,500 கி.மீ வேகத்தில் செல்லும் ஜெட் விமானத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் என்ன ஆகும்  தெரியுமா?” “மைக்ரோசெகண்டில் கடந்துசெல்லும்போது கைகாட்டினால் எப்படித் தெரியும்?” எனக் கிண்டல் செய்ய ஆரம்பித்ததும் சர்வதேச அளவில் பீஸ்ட் டிரண்டிங்கில் இடம்பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

SCROLL FOR NEXT