செய்திகள்

எதிர்பார்ப்பைத் தூண்டும் ‘777 சார்லி’ படத்தின் டிரைலர் வெளியீடு

ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘777 சார்லி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘777 சார்லி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடிப்பில் இயக்குநர் கிரண்ராஜ் இயக்கத்தில் நாயை மையமாக வைத்து  உருவாகியிருக்கும் திரைப்படம் ‘777 சார்லி’.

தற்போது இந்தப் படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். யாரும் மதிக்காத நாயகனைத் தேடி ஒரு நாய் வருகிறது. அதனுடன் சேர்ந்து பயணிக்கும்படியான காட்சிகள் ரசிக்க வைக்கிறது. 

கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது.

தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பென்ச்’ நிறுவனம் வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

ரக்‌ஷித் ஷெட்டியுடன் சங்கீதா ஸ்ரீங்கேரி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜுன் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை தலைமையகத்தில் 10 மணி நேரம் விசாரணை..!

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரியகுளம் கண்மாயில் பொருத்தப்பட்ட இரும்பு ஷட்டா்கள்!

ஆபரேஷன் சிந்தூர் 2.0 : லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்

பிப்.28-ல் பிரதமர் மோடி அஜ்மீர் பயணம்! ரூ.16,686 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேக்கு இமாலய இலக்கு!

SCROLL FOR NEXT