செய்திகள்

கேன்ஸ் பட விழாவில் தீபிகா படுகோன் (படங்கள்)

கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பில் தீபிகா படுகோன் உள்பட இந்தியப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

DIN

கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பில் தீபிகா படுகோன் உள்பட இந்தியப் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் 2022 கேன்ஸ் திரைப்பட விழா மே 17 முதல் 28 வரை நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாகக் கடந்த இரண்டு வருடங்களாக இப்படவிழா நடைபெறவில்லை. இதனால் இந்தமுறை பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்து வருகிறார்கள். மதிப்புமிக்க நாடாக இந்தியா இம்முறை தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆறு இந்தியப் படங்கள் பட விழாவில் திரையிடப்படுகின்றன. போட்டிப் பிரிவுக்கான நடுவர்களில் ஒருவராகப் பிரபல நடிகை தீபிகா படுகோன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் சார்பில் மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா், நடிகர்கள் மாதவன், நவாசுதீன் சித்திகி, இயக்குநர் சேகர் கபூர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகைகள் தீபிகா படுகோன், தமன்னா, ஊர்வசி ரெளடேலா போன்றோர் சிவப்புக் கம்பள வரவேற்பில் கலந்துகொண்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT